Friday, May 25

வாங்க ஞானியாகலாம்..!

சித்தர்பூமி
ஒருவழியா, யூடியூப்ல சேனல் தொடங்கியாச்சு. சித்தர்பூமி  அப்படிங்கிற யூடியூப் சேனலுக்கு உலகம் முழுக்க ஏகோபித்த ஆதரவு கிடைச்சிருக்கு. தொடங்கின சில தினங்களுக்கு உள்ளேயே சுமார் 50க்கும் மேற்பட்ட வீடியோக்களை அப்லோட் செய்திருக்கோம். ஸ்ரீ பகவத் அய்யா, கவனகர் ராம கனக சுப்புரத்தினம், சுவாமினி பிரமானந்தா, போகர் நவபாஷாண சிலை ரகசியம், ஸ்ரீ விஜயகுமார் சுவாமிகள், நடிகர் ஸ்ரீகாந்தின் அமானுஷ்ய அனுபவம், ஜெர்மன் சாமின்னு சொல்லப்படும் சத்குரு ஸ்ரீ ராஜ்குமார் சுவாமிகள் இப்படி பலரோட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கு. இதெல்லாமே ஆரம்பம்தான். எல்லாரும் இப்போ கேட்கிற ஒரே விஷயம். எப்போ மூன்றாவது கண் நிகழ்ச்சி இதுல வரும் அப்படிங்கறதுதான். அதுக்கு போதுமான சப்ஸ்க்ரைபர்ஸ் தேவை. குறைந்தபட்ச நபர்கள் நம்மோட சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்த உடனே, மூன்றாவது கண் நிகழ்ச்சி, சித்தர்பூமி என்கிற புதிய பெயரில் இங்கே தொடர ஆரம்பிக்கும்.
இங்கே உங்களோட பார்வைக்காக நம்மோட சித்தர்பூமி யூ டியூப் சேனலோட லிங் சிலதை இணைத்திருக்கோம். இனி, இந்த பிளாகிலும் தொடர்ந்து பதிவுகள் வெளியாகும்.

1. ஸ்ரீ பகவத் அய்யா
2. கவனகர் ராம கனக சுப்பு ரத்தினம் அய்யா
3.எழுத்தாளர் பாலகுமாரன்
4.சத்குரு ஸ்ரீ ராஜ்குமார் சுவாமிகள்
5.வாங்க ஞானியாகலாம்..!
6. சுவாமினி பிரமானந்தா
7.நடிகர் ஸ்ரீகாந்த்

Thursday, April 19

சித்தர் பூமி ...விரைவில்..!

2014 முதல் வேந்தர் டிவியில் வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சி மூன்றாவது கண். பல தடைகளையும், பல சிரமங்களையும் எதிர்கொண்டபடிதான் அந்த நிகழ்ச்சி உலக மக்களின் பார்வைக்கு சென்று சேர்ந்தது. இன்று உலகம் முழுக்க மூன்றாவது கண் நிகழ்ச்சிக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
 மற்றவையெல்லாம் பொழுதுப்போக்கும் நிகழ்ச்சிகளாக இருக்க, மூன்றாவது கண் நிகழ்ச்சி மட்டும் பலரது துன்பங்களை போக்க உதவும் ஒரு நிகழ்ச்சியாக பலருக்கும் வழிகாட்டியிருக்கிறது. அதன் பிரதிபலனாக, மூன்றாவது கண் நிகழ்ச்சியை இனியும் வேந்தர் டிவியில் தொடர்வதில் சிக்கல்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
அதனால், தற்போது, ஒரு புதிய வாய்ப்பாக இணையத்தின் வழியாகவே உலகின் பார்வைக்கு நிகழ்ச்சியை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இனி, வெகு விரைவில் ’சித்தர் பூமி’ எனும் புதிய பெயருடன் நமது நிகழ்ச்சி உங்களது பார்வைக்கு வரவிருக்கிறது. சில தொலைக்காட்சிகளிலும் கூட நமது நிகழ்ச்சி குறித்து கேட்டுள்ளனர். எது எப்படி இருப்பினும் உடனடியாக, சித்தர் பூமி வெகு விரைவில் யூடியூப் வழியாக உங்களை வந்து சேரவிருக்கிறது.
சித்தர் பூமி இந்த யூடியூப் லிங்கில் இணைந்திருங்கள்..., நமது சித்தர் பூமி புதிய எபிசோட் வெகு விரைவில் அப்லோட் செய்யப்பட உள்ளது. நன்றி..,

Tuesday, June 23

இன்று, வேந்தர் டிவி, மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..ஓம்கார் ஸ்வாமிகள்..!

உங்கள் வேந்தர் டிவியில்..,
மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..,
இன்று இரவு 9.30 மணிக்கு..,
# தண்ணீரை மருந்தாக மாற்றும் மந்திரங்கள்..!
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் முன்னிலையில் நிரூபித்துக்காட்டிய சாமியார்.
வேதங்களில் மறைந்திருக்கும் ரகசியங்கள்..,
டெயில்பீஸ்; தண்ணீரை மந்திரிச்சுதான் நம்ம முன்னோர்கள் பயன்படுத்தி இருக்காங்க. அதை இன்னைக்கு எபிசோட்ல சயின்டிபிகலா, விளக்கியிருகாரு ஓம்கார் ஸ்வாமிகள். ஒவ்வொரு மந்திரத்துக்கும், தண்ணியில ஒரு வடிவம் உருவாகுது. அது பார்க்க வைர ஆபரணம் மாதிரி இருக்கு. இன்னைக்கு எபிசோட் பார்க்கிற எல்லாரையும் பிரமிக்க வைக்கும் அப்படிங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை.
வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 01

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 02

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 03

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 04

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 05

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 06

வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 07

..இன்று இரவு 9.30 மணிக்கு, வேந்தர் டிவி..மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..ஓம்கார் ஸ்வாமிகள்

Sunday, May 17

காசியின் உண்மையான முகங்களைத் தேடி ஒரு பயணம்..!

பிணம் திண்ணும் அகோரிகள்.,
கஞ்சா புகைக்கும் சாமியார்கள்..,
எந்த நேரமும் பிணங்களை எரிக்கும் கங்கைக்கரை..,
இவையெல்லாம் தான் காசியா..,
இவை மட்டும்தான் காசியா..,
காசியின் உண்மையான முகங்களைத் தேடி ஒரு பயணம்..!
...திங்கள்(18மே) நாளை முதல், 

ஒவ்வொரு திங்கட்கிழமையிலும்
இரவு 9.30 மணிக்கு..,
உங்கள் வேந்தர் டிவியில்..,
THE REAL KASI..,
Moondravathu Kan -Exclusive


The Real Kasi 01
The Real Kasi 02
The Real Kasi 03
The Real Kasi 04
The Real Kasi 05
The Real Kasi 06
The Real Kasi 07
The Real Kasi 08
The Real Kasi 09
The Real Kasi 10

Tuesday, March 31

அடுத்த சில மாதங்களில்..இவையெல்லாம் தலைப்புச்செய்தியாகும்..! அகத்தியர் ஜீவநாடி அமானுஷ்யங்கள்..!!

இனிய உறவுகளுக்கு, அன்பு வணக்கங்கள்..,
நான் கொஞ்சநாளா, இந்தப்பக்கமே வராம இருந்துட்டேன். அதுக்கெல்லாம் உங்க கிட்டே வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். அதுக்கு காரணம் இருக்கு.  சில மாதங்களா, வேந்தர் டிவியில மூன்றாவது கண் அப்படிங்கிற ஒரு நிகழ்ச்சிய பத்தி நீங்க எல்லாம் கட்டாயம் கேள்விப்படிருப்பீங்க. நான்தான் இந்த நிகழ்ச்சியோட இயக்குநர். அதனாலதான், கொஞ்சம் பிசி ஆகிட்டேன். ஆனா, இப்போ, எல்லாம் சித்தர்கள் வழிகாட்டுதலோட, சிறப்பா நடந்துட்டு இருக்கு. இந்த மூன்றாவது கண் நிகழ்ச்சியில, நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் பல கேரக்டர்ஸ் இதுவரைக்கும் வந்துபோயிருக்காங்க. அதுல, இன்னைக்கு வரவிருக்கிற ஒருத்தர் என்னை ரொம்பவே அசத்திட்டாரு. இவரோட  predictions ரொம்பவே துல்லியமா இருக்கு. இவர்கிட்ட சில வருஷங்களுக்கு முன்னாடியே, நரேந்திரமோடிக்கு அவரோட குடும்பத்தார் ஜீவநாடி பார்த்திருக்காங்க. 8 வருஷத்துல பிரதமராவாருன்னு அதுல வந்தபடியே இப்போ மோடி பிரதமாகியிருக்காரு. இப்படி, இந்த ஜீவநாடி சொல்ற பாபு ரொம்பவே சிம்பிளானவரா இருக்காரு. இவருக்குள்ள அகத்தியர் வந்துதான் இப்படி வாக்கு சொல்றதா இவரு சொல்ராரு. 
அகத்தியர்
கிரந்த தமிழ்னு சொல்லிட்டு இவரு வித்யாசமான மொழியில பாட்டு படிச்சு, பலன் சொல்ல தொடங்குறாரு. அதெல்லாமே இன்ட்ரஸ்டிங்கான மேட்டர்தான் ...இன்னைக்கு முடிஞ்சா, தவறாம வேந்தர் டிவிய, ராத்திரி 9.30 மணிக்கு பாருங்க. இந்த எபிசோட்ல நம்ம மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக, ஒரு ஸ்பெஷல் பிரடிக்‌ஷன் பார்த்து சொல்லியிருக்காரு.அதுல சில பயங்கரமான விஷயங்கள் மறைஞ்சிருக்கு. இதெல்லாம்தான் அடுத்து வரும் மாதங்கள்ல மீடியாக்களால பரபரப்பா பேசும் விஷயங்களா இருக்கும்னு இவரு மூலமா அகத்தியர் சொல்லியிருக்காரு...இன்னைக்கு எபிசோட் பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க..!
இவரு நம்மோட மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக, ஸ்பெஷலாஒரு prediction பார்த்தாரு.அதுல இவரு சொல்லியிருக்கிறது இதெல்லாம்தான்..,
# ஒரு நடிகையோட திருமணம் தடை படும்..
# ஒரு நடிகர் கட்சி தொடங்குவார்
# ஒரு நடிகர் மரணம் அடைவார்..,
# ஒரு பெண் அரசியல் வாரிசுக்கு பிரச்னை வரும்
இப்படி தமிழகத்துல மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கும் சில விஷயங்களை கணிச்சு சொல்லியிருக்காரு.
இதெல்லாம் இந்த ஒன்றரை மாசத்துல நடக்கும்னு பாபு சொல்லியிருக்காரு.
இன்னைக்கு எபிசோட், ஒரு திரில்லிங்கான எக்ஸ்பீரியன்ஸ்..!
# ஒரு பெண் அரசியல் வாரிசுக்கு பிரச்னை..!
கட்சி தொடங்கவிருக்கும் ஒரு நடிகர்..!!
விவிஐபிக்கள் பார்த்து வியந்த
ஜீவநாடி ஜோதிடத்தின் அதிரடி கணிப்புகள்..!
...மூன்றாவது கண் அனுபவங்களோடு மீண்டும் சந்திப்போம். 

Saturday, June 28

' சென்னையில் வாழ்ந்த பறக்கும் பெண் சித்தர்..! ' தமிழ்த்தென்றல் திருவிகாவே நேரில் பார்த்திருக்கிறார்..!!

"…சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும்

அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார்.  
ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா

அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர் சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர்

அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது

அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவர் என்றும் அவரிடம் பறவைக்குரிய கருவி காரண அமைப்புகள் சில உள்ளன என்றும், ஊர்தல் (Evolution) அறப்படி அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்று அவரால் விளக்கப்பட்டது

அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லலை

யான் தேசபக்தன் ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்டாவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார்

பறவை நாயகியர் நிலை மனோதத்துவத்திற்கு எட்டுவதா? எண்ணிப்பாருங்கள்…"

-இது 'உள்ளொளி' நூலில் தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்கள் 
பறவை சித்தர் பற்றி எழுதிய குறிப்பு.

இப்படிக் குறிப்பிடப்படும் அந்த பறவை சித்தரின் பெயர் ஸ்ரீசக்கரை அம்மா..,

ஸ்ரீ சக்ர அம்மா

சிவனையும், ஸ்ரீசக்ரத்தையும் வழிபட்டு வந்ததால், இவருக்கு ஸ்ரீசக்ர அம்மா என்றிருந்த பெயர் மருவி, காலப்போக்கில் ஸ்ரீ சக்கரை அம்மாவாக மாறிப்போனது..,

அட்டமா சித்திகளில் ஒன்றான, லஹிமா எனும் காற்றில் பறக்கும் சித்து கைவரப்பெற்ற மகாயோகி இவர்.அப்படி இவர் பறந்ததால் அப்போது சென்னையில் ஏற்பட்ட பரபரப்பைத்தான் திருவிகவே தனது நேரடி சாட்சியமாக பதிவு செய்து வைத்திருக்கிறார்..,

சுவாமி விவேகானந்தர், ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப்பரதேசி, போளூர் விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ ரமண மகரிஷி போன்றோருடன் ஸ்ரீ சக்ர அம்மாவிற்கு சந்திப்பு நிகழ்ந்தவைகளுக்கான ஆதாரங்கள் உள்ளன..,

அம்மா மஹாசமாதி அடைந்த பிறகு, இவரது சமாதிக்கு வந்த மஹாபெரியவா இங்கு ஐந்து நாட்கள் தங்கி இருந்து தவம் செய்திருக்கிறார்..,

'மஹாபெரியவா'

எத்தனை பெரிய சக்திமையமாக அம்மாவின் மஹாசமாதி இருக்கும் என்பதை மஹாபெரியவா இந்த இடத்தை தேர்வு செய்ததிலிருந்தே  நாம் புரிந்துகொள்ளலாம்..,

இத்தனை மகத்துவம் வாய்ந்த ஸ்ரீசக்ர அம்மாவின் மஹாசமாதி சென்னை திருவான்மியூரில் கலாஷேத்திரா ரோடில் அமைந்துள்ளது.

ஸ்ரீசக்கரத்தின் சக்தி பிரவாகமாக, திகழும் இந்த மஹாசமாதியில் அம்மாவின் சிலையுடன் ஒரு கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நாளை 29 (ஜூன்) காலை 7.30முதல் 9மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

நேரில் தரிசிக்க வாய்ப்பு இருப்பவர்கள் சென்று, ஸ்ரீ சக்ர அம்மாவின் பரிபூரண அருளை பெறுங்கள்..குருவே சரணம்..!

தொடர்புகொள்ள ; விஸ்வநாத குருக்கள் -9444017389