Thursday, January 9

குழந்தை இல்லாதவங்களுக்கு திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதம்..!

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் -03

ஞாயித்துக்கிழமை(ஜனவரி05,2014) ஒளிபரப்பான இந்தபகுதியில மிகமுக்கியமான ஒரு விஷயத்தப்பத்தி திருப்பதி கோயிலோட பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் பேசியிருக்காரு.



குழந்தைஇல்லாத தம்பதிகளுக்கு இது ஒரு அற்புதமான செய்தி..!

ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், திருமலை திருப்பதியில பெருமாளுக்கு அமிர்தகலசம் அப்படிங்கிற ஒரு பிரசாதம் நைவேத்யம் செய்யறாங்க. இது
அரிசிமாவு, மிளகு,வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு பிரசாதம்.

சாமிக்கு நைவேத்யம் செய்துவிட்டு, அடுத்து கருடாழ்வாருக்கு நைவேத்யம் செஞ்சபிறகு, இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்யறாங்க.

இதோட சிறப்பு என்னன்னா, அமிர்தகலசம் சாப்பிடும் தம்பதிகளுக்கு உடனே, குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதுதான்..,

அதுமட்டுமில்லாம,இந்த அமிர்தகலசம் பிரசாதம் எடுத்துக்கொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் அந்த குழந்தையினால் அந்தத் தம்பதிகளுக்கு சிறப்பு உண்டாகும் என்றும் ஆகம சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அளவிற்கு விசேஷ சக்தி கொண்ட பிரசாதம்தான் அமிர்தகலசம்..!

இந்த அமிர்தகலசம் ஞாயிறு காலை மட்டுமே திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அமிர்தகலசம் எனும் இந்தப் பிரசாதத்தை வாங்கறதுக்கு வார,வாரம் ஞாயித்துக்கிழமைகள்ல குழந்தை இல்லாத தம்பதிகள் மத்தியில கடும் போட்டி இருப்பதா சொல்றாரு டாக்டர் ரமண தீட்சிதர்.

ஆனா, வாராவாரம் தனக்கு கிடைக்கும் அமிர்தகலசம் பிரசாதத்தை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கொடுத்து உதவுவதாகவும், என்னிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

குழந்தை இல்லை அப்படிங்கிற மனக்குறையோட தவிச்சிட்ட இருக்கற தம்பதிகள், இந்த அமிர்தகலசம் பிரசாதத்த வாங்கி சாப்பிட்டு, பெருமாளோட அருளால, உங்க குறைய போக்கிக்கலாம்.

அது மட்டுமில்லாம,பெருமாளோட பரிபூரண ஆசியோட பிறக்கும் அந்தக் குழந்தையால, உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் பெருமை கிடைக்கும் அப்படிங்கறதும், எத்தனை பெரிய ஆசீர்வாதம்..!

அதனால, குழந்தை இல்லாத தம்பதிங்க திருப்பதி கோயில்ல, இந்த அமிர்தகலசம் பிரசாதம் வாங்கிச்சாப்பிட்டு, உங்க குறை தீர, எல்லாம் வல்ல அந்த வேங்கடவன் அருளவேண்டும்னு, பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

அமிர்தகலசம் பிரசாதத்துக்கு திருமலையில கடும்போட்டி இருக்கறதால, அத வாங்க முடியாத தம்பதிகள் மட்டும், என்னோட மெயிலுக்கு உங்க விபரங்கள விரிவா எழுதி தொடர்புகொள்ளுங்கள்..!

சம்மந்தப்பட்ட தம்பதிகள் மட்டும் நேரடியாக மெயிலில் தொடர்புகொள்ளுங்கள்(உங்கள் புகைப்படத்துடன்)

அப்படி எனக்கு வரும் கடிதங்களை, நான் நேரடியாக டாக்டர் ரமண தீட்சிதரிடம் ஒப்படைத்து, இந்த அமிர்தகலசம் பிரசாதம் கிடைக்க உதவும்படி கோரிக்கை வைக்க இருக்கிறேன்..!

எனது மெயில் முகவரி ; jayakanthan2007@gmail.com

பக்தர்களின் குறைகள் தீர எம்பெருமான் நிச்சயம் உதவுவார்...இதற்கு, நீங்களும், நானும் தெரிந்தவராக, அறிமுகமானவராக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாம், ஸ்ரீ வேங்கடவன் எனும் ஒற்றைப்புள்ளியில் நாம் அனைவரும்  இணைந்திருக்கிறோம்..ஓம் நமோ வேங்கடேசாய..!

இதோ..அமிர்தகலசம் பற்றின அந்த வீடியோ பதிவு..!

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் -03

நன்றி ; தந்தி டிவி





Wednesday, January 8

கிரகதோஷங்களைப்போக்கும் சனிக்கிழமை விரதம்..! திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் ..பாகம் -02


தந்தி டிவியில புதுசா தொடங்கப்பட்ட,


                                 'திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள்'

 நிகழ்ச்சியோட இரண்டாம் பாகம் சனிக்கிழமை (ஜனவரி04,2014) அன்னைக்கு ஒளிபரப்பானது. 

இந்த வீடியோவுல என்னெல்லாம் இருக்கும்னு உங்களுக்கு சில டிப்ஸ் மட்டும் இந்த பதிவுல சொல்லிடறேன்..




  • சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகம் வால்மீகி எழுதிய சமஸ்கிருத ராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
  • தோமாலை சேவையில் பெருமாளுக்கு அணிவிக்கப்படும் சாளக்கிராம மாலை
  • ஒரு தாமரை ஆயிரம் மல்லிகைக்கு சமம், ஒரு துளசி ஆயிரம் தாமரைக்கு சமம்.., வாடினாலும் துளசி பயன்படுத்தலாம் 
  • கிரகதோஷங்களைப்போக்கும் சனிக்கிழமை விரதம்
  • இப்போ கீழே இருக்குற வீடியோ இணைப்புல, அந்த நிகழ்ச்சி பாருங்க..,

நன்றி ; தந்தி டிவி

Tuesday, January 7

உற்சவர் உலா வந்தால் தீவிபத்து - திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள்


ஓம் நமோ வேங்கடேசாய..!

HAPPY NEW YEAR 2014..!

இந்த வருஷத்தப்பொருத்தவரைக்கும், நானே எதிர்பாராத பல மாற்றங்கள் என்னோட வாழ்க்கையில நடந்திருக்கு. எப்போதும் உடன் இருந்து என்னை வழிநடத்தும் குருவருளே அதற்குக் காரணம்..குருவே சரணம்..!

சமீபத்துல, தீடீர்னு திருமலை திருப்பதி கோயில் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதரோட ஒரு தொடர்பு கிடைச்சது.


 திருமலை திருப்பதியில இருக்குற தீர்த்தங்களப்பத்தி ஒரு நிகழ்ச்சி தயாரித்து  நீ வெளியிட வேண்டும்னு என்னோட குரு கவிஞர் பெருமாள்ராசு ஐயா அவர்கள் என்னிடத்தில்,என்னைக்கு சொன்னாரோ, அதுல இருந்தே, இப்படித்தான் திருமலை சம்மந்தமான, பல அரிய தகவல்கள் எனக்கு, தானாகவே, கிடைச்சிட்டு வருது. 

பல மகான்கள் வியந்த அந்த திருமலை திருப்பதியோட தீர்த்த விபரங்கள் எனக்கு கிடைக்க தொடங்கினதே கூட ஒரு அற்புதம்தான்..!

அப்படித்தான், டாக்டர் ரமண தீட்சிதரோட தொடர்பு கிடைச்சதும், திருமலை திருப்பதி பத்தி அவரோட ஆழமா பேசப்பேச,அவர் சொன்ன பல அற்புதமான தகவல்கள் என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்துச்சு..

உடனே, இத எளிமையா, வணிக நோக்கமெல்லாம் இல்லாம, பக்தர்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கமுடியுமான்னு யோசிச்சேன்..அதுக்கும் பெருமாளே வழி காட்டினாரு..

இதோ..இந்த புத்தாண்டு தினத்தில இருந்து, நிகழ்ச்சி  தந்தி டிவியில ஒளிபரப்பாகத் தொடங்கிடுச்சு..

திருமலை திருப்பதி- பிரபஞ்ச ரகசியங்கள் அப்படின்னு நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டி உங்க முன்னாடி தவழவிட்டாச்சு..

இதுல டாக்டர் ரமண தீட்சிதர் பத்தி உங்களுக்கெல்லாம் ஒரு சின்ன அறிமுகம் தேவை..

இவர் மைக்ரோ பயாலஜியில டாக்டரேட் முடிச்சிருக்காரு. விஞ்ஞானியா வேலை செய்ய வரும்படி பல வெளிநாடுகள்ல இருந்தெல்லாம், வந்த வேலைவாய்ப்புகள மறுத்துட்டு, 

திருமலை திருப்பதி கோயில்ல இவங்க குடும்பத்துக்கென்று இருக்கும் பரம்பரை அர்ச்சகர்  உரிமை மூலமா, திருமலை திருப்பதி கோயில்  பிரதான அர்ச்சகரா வேலை பாத்துட்டு இருக்காரு. 

ஒரு விஞ்ஞானியா இருக்கறதவிட தினந்தோறும், திருமலை கோயிலுக்குள்ள போயி பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யறத மிகப்பெரிய பாக்கியமா நினைக்கிறாரு. 

பலரும், நொடிப்பொழுதுகூட பார்க்கமுடியாத பெருமாளோட, தான் தினம்தினம் மணிக்கணக்கில் கூட இருப்பதே, இந்த உலகவாழ்க்கைக்கு போதுமானதுன்னு இவரு பெருமிதமா சொல்றாரு.

தொழிலதிபர் அம்பானி, பிரதமர் மன்மோகன்சிங், நடிகர் அஜித், இப்படி எந்த விவிஐபி பிரமுகர் திருமலை திருப்பதி கோயில் தரிசனத்துக்கு வந்தாலும் பிரதான அர்ச்சகரான டாக்டர் ரமண தீட்சிதர் மூலமாகத்தான்  அவர்களுக்கு தரிசனமும், மரியாதைகளும் செய்யப்படுவது வழக்கம்.

இந்த அளவுக்கு முக்கியத்துவம் இவருக்கு இருப்பதற்குக் காரணம் இவர் வெறுமனே, பிரதான அர்ச்சகர் அப்படின்றதால மட்டுமில்லீங்க, திருமலை திருப்பதி கோயிலில் கடைபிடிக்கப்படும் வைகானச ஆகமத்திலும் இவர் நிபுணத்துவம் பெற்றவர் அப்படின்றதாலதான்..,

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மனிதரை சந்திப்பதே மிகவும் சிரமம், ஆனால், அவரோ என்னைப்போன்ற  ஒரு சாதாரண ஆளின் சொல்லுக்கு மதிப்புகொடுத்து எனக்கு நேரம் ஒதுக்கி ,இப்படி ஒரு நிகழ்ச்சி செய்யலாம் என்ற எனது ஆலோசனையை ஏற்று, அதற்கு ஒத்துழைப்பு நல்குவதாக ஒப்புதலும் அளித்தார்.

சொன்னபடியே, செய்தும் காட்டினார்.., ஆம்..படப்பதிவின்போது, டாக்டர் ரமண தீட்சிதரின் எளிமையும், தன்மையோடு பேசும் பாங்கும்,  அவரது ஒத்துழைப்பும் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது.

அந்த பெருமாளே அவர்மூலமாக பல அரிதான தகவல்களை வெளிப்படுத்துவதாகத்தான் நான் கருதுகிறேன்.

நாமறிந்த திருப்பதியில் நாம் அறியாத தகவல்களை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்...இதுவரை பெருமாளின் மீது, தீராத காதலோடு, பக்தி மட்டுமே கொண்டு வணங்கி வரும் கோடானுகோடி பக்தர்களுக்கு வேங்கடவனைப்பற்றி விரிவாக விளக்கிச்சொல்லி, இன்னும் நெருக்கத்தை, புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் இந்த முயற்சியின் நோக்கம்..!


புத்தாண்டு முதல் வாரந்தோறும் தந்தி டிவியில் சனி, ஞாயிறு கிழமைகளில், காலை  உதயம் புதிது நிகழ்ச்சியில் சுமாராக காலை 7.10 முதல் 7.15க்குள் திருமலை திருப்பதி பிரபஞ்ச ரகசியங்கள் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியிருக்கிறது. 

உலகம் முழுக்க வியாபித்திருக்கும் பக்தர்களும் இந்த நிகழ்ச்சி குறித்து உங்களது ஆலோசனைகளை எனக்கு எழுதுங்கள்.., 

நீங்களும் கூட திருமலை திருப்பதி குறித்து உங்களுக்கு ஏற்படும் கேள்விகளை எனக்கு எழுதலாம், 

அதற்கான  பதிலைப்பெற்று  நிகழ்ச்சியில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும்..,

வேங்கடவனைப்பற்றி பேசுவதுகூட , கோவிந்த நாம சங்கீர்த்தனம் போல, இறைபணிதான்.., எனவே, வாருங்கள்..உங்களோடு கைகோர்த்து இந்த நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக்கலாம்..!

புத்தாண்டு தினத்தன்று , வெளியான முதல் நிகழ்ச்சி இதோ..!

இதில், திருமலை, திருப்பதி கோயிலுக்குள் இருக்கும் சிலைகளைப்பற்றின பல அரியதகவல்களை பதிவு செய்திருக்கிறார் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர்..!

600 ஆண்டுகளுக்குமுன், குகையில் கண்டெடுக்கப்பட்ட சிலை..!

உற்சவர் உலா வந்தால் கிராமங்களில் தீவிபத்து..!


-நன்றி..தந்தி டிவி