Tuesday, August 6

அற்புதங்களை நிகழ்த்திய நித்யாநந்தா!– ஒரு பக்தையின் அனுபவம்

இந்தப் பதிவுல தொடர்ந்து நீங்களும் என்னோட பயணிக்கிறதுல ரொம்பவே மகிழ்ச்சி.

வாங்க..பகவான் நித்யாநந்தா நிகழ்த்திய அந்த அற்புதங்களப் பார்ப்போம்.

அதுக்கு முன்னால..,புதுசா இந்தப்பதிவுக்கு வந்தவங்களுக்காக

ஒரு சின்ன RECAP

பதிவோட ஆரம்பம் முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதி..இது மூன்றையும் படிச்சிடுங்க…அடுத்ததா இதோ…லதா கபாலீஸ்வரன் தனது அனுபவங்களைச் சொல்றாங்க..,

“…என்னோட ஹீலிங் குரு என்னோட வீட்டுக்கு வந்துட்டுபோகும்போது, பாபாவோட படத்த எங்க வீட்லய விட்டுட்டு போயிட்டாருன்னு சொல்லியிருந்தேன் இல்லையா..அவரு வீட்டுக்கு போனதும் எனக்கு போன் பண்ணாரு. எப்படி மறந்தேன்னு தெரியல..அந்தபடத்த எடுத்துட்டு வந்துடுன்னாரு.

நாம கேட்டமாதிரியே பாபா நம்மோட வீட்லயே தங்கிட்டாரேன்னு எனக்கு ஒரே சந்தோஷம். 


Bhagavan Nityananda

அவரு(ஹீலிங்குரு) புறப்படும்போது,அதுவரைக்கும் தன்னோட கையிலயே படத்த வச்சிகிட்டு இருந்தவரு, வாசல்ல நாங்க பேச ஆரம்பிச்சதும், பக்கத்துல இருக்குற சேர்ல படத்த வச்சிருக்காரு.அப்புறம் புறப்படும்போது அத மறந்துட்டு போயிட்டாருன்னு தான் என்னை நானே சமாதானபடுத்திகிட்டேன்.

பாபாவோட அற்புதங்கள பாக்குறவரைக்கும் அப்படித்தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா, பாபா சாதாரண ஆள் கிடையாதுங்க..தன்னோட பக்தர்கள்கிட்ட எப்பவும் எதாவது ஒரு விளையாட்ட விளையாடி பாத்துகிட்டே இருப்பாரு.

சரின்னு..நான் பாபாவோட படத்த எடுத்துகிட்டு ஒரு ஆட்டோவுல ஏறி என்னோட ஹீலிங் குருவோட வீட்டுக்கு புறப்பட்டு போனேன்.
பாபாவ என்னோட மடியில, அதுவும் அவரோட தொப்பையில என்னோட கை இருக்கற மாதிரி வச்சு கட்டி புடிச்சிகிட்டே ஆட்டோவுல போயிட்டிருக்கேன்.
அப்பதான் அந்த ஆச்சரியமான அனுபவம் எனக்கு கிடைச்சது.

நம்ம மடியில ஒரு குழந்தைய வச்சிட்டு இருந்தா, அதோட உடம்புல இருந்து இதயத்துடிப்ப எப்படி நாம உணருவோம்…அதே மாதிரி..பாபாவோட படத்துல இருந்து எனக்கு அப்படி ஒரு பல்பிடேஷன்(இதயத்துடிப்பு) தெரிஞ்சது.அதநான் நல்லா உணர்ந்தேன்.

உடம்பெல்லாம் சிலுத்துபோச்சு..அப்படியே கண்ல இருந்து கண்ணீர்..எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..இதோ என்னோட மடியில..அதுவும் என்னோட பிடிக்குள்ளே..பாபா இருக்கார்..அதுவும் உயிர்துடிப்போட இருக்கார்.

நான் அவர கட்டிபிடிச்சுட்டு இருக்கேன்..அப்படியே சத்தம்போட்டு கதறி அழலாம்போல ஒரே மகிழ்ச்சி ஆராவாரம்..அந்த உணர்வு..எப்படிப்பட்டதுன்னு இப்ப உங்களுக்கு விவரிக்கும்போது கூட என்னால அழுகைய கட்டுப்படுத்த முடியல…

(கண்களில் நீர்கோர்க்க..பேச தடுமாறுகிறார்…அவரையும் மீறி அழுகை வருகிறது..)

அப்படியே போய் பாபாவ என்னோட ஹீலிங் குருகிட்ட ஒப்படைச்சிட்டு எனக்கு தயவுசெய்து இந்த பாபாவ கொடுங்கன்னு கேட்டேன்.
அவரும் தன்கிட்ட இருந்த இன்னொரு பாபா படத்த எடுத்து என்கிட்ட கொடுத்தாரு.

"..கடைசியா..இன்னும் ஒரேயொரு படம்தான் இருக்கு..ஆனா..அது கொஞ்சம் டேமேஜ் ஆகி இருக்கு.."

"..கொடுங்க..கொடுங்க..பாபா..பாபா..எத்தன பாபா இருந்தாலும் கொடுங்க.."இது நான்.

அந்த ரெண்டு படத்தையும் வாங்கின நொடி என் வாழ்நாள்ல நான் மறக்கமுடியாத முக்கியமான தருணம்.

ஒரு படத்த என்னோட அலுவலக அறையிலயும், இன்னொன்ன வீட்டு ஹால்லயும் மாட்டி வச்சிருக்கேன். அத வெறும் படமா என்னால பாக்க முடியாதுங்க..அவரு என்கிட்ட பேசிகிட்டே இருக்காரு.அப்பப்போ சில சைகைகள செய்வாரு.

(பகவான் நித்யாநந்தா நடத்தின  அற்புதங்கள ஒரு பெரிய பட்டியலா வரிசையா சொல்லிட்டே இருந்தாங்க.அதை பிறகு ஒரு சந்தர்ப்பத்துல தனிப்பதிவாக பார்ப்போம்)

அவர் எங்கிட்ட வந்த நாள்..எனக்கு மகாலட்சுமியோட அருள் பரிபூரணமா கிடைச்சிருச்சு.

அதுவரைக்கும் 360 டிகிரியில என்ன சுத்தி பிரச்னைகள்..ஆனா,பாபா வந்ததும் எல்லாமே காணாம போச்சு..நிறைய அற்புதங்கள்..அதுக்கப்புறமாதான் என்னத்தேடி பிரச்னைகளோட வர்றவங்களுக்கு ஜோதிடம்,ஹீலிங்ன்னு செய்யத்தொடங்கினேன்.ஆனா, இது எல்லாமே பாபா மூலமாத்தான் நடக்குது.

இங்க யார் வந்தாலுமே..நான் உடனே, அவரபாத்து பாபா..இவங்களோட பிரச்னைய நீங்கதான் தீர்க்கணும்னு சொல்லுவேன்.உடனே…ஓகே.. அவ்வளவுதான்..பாபாதான் எல்லாரோட பிரச்னையையும் தீர்க்கிறார். என்னுடைய வேலைன்னு எதுவுமே கிடையாது.

அதனாலதான் இப்போவெல்லாம் வருஷத்துக்கு ஒருமுறை அவரோட மஹாசமாதி நாளான ஆகஸ்ட் 8ம் தேதி அன்னைக்கு மட்டும் இலவச தியான முகாம் நடத்துறோம்.

அதுல மாஸ் ஹீலிங்,கிரிஸ்டல் ஹோமம் நடக்கும். நோய்நொடியெல்லாம் தீரும்.உங்களோட விருப்பங்கள எழுதி கிரிஸ்டல் ஹோமத்துல வச்சா நீங்க நினைச்சது நடக்கும்…அனுமதி இலவசம்..

சென்னை திநகர்ல இருக்குற தியாகராய ஹால்லதான் இந்த தியான முகாம் நடக்கப்போகுது. அதனால நாளை மறுநாள்(ஆகஸ்ட்8ம்தேதி) சாயந்திரம் 5 .30 மணியிலயிருந்து 8.30 மணிவரைக்கும் நடக்கிற இந்த முகாம்ல வந்து இந்தப்பதிவ படிக்குற எல்லாரும் வந்து கலந்துக்கோங்க..”

இப்படி எல்லாம் சொல்லி முடிச்ச லதா கபாலீஸ்வரன்,

"..உங்களுக்கு நான் அவரோட படங்கள் சிலதை காட்றேன்..”னு சொல்லிட்டு
தன்னோட ரூம்ல இருந்து அவரோட போட்டோக்கள எடுத்துட்டு வரச்சொன்னாங்க.

"..அதுல ஒரு போட்டோவுல கூலிங்கிளாஸ் எல்லாம் போட்டுட்டு பாபா சும்மா ஜம்முன்னு போஸ் கொடுத்திருப்பாரு அத நான் உங்களுக்கு காட்றேன்..”னு சொல்லிட்டு இருக்கும்போதே..ஏராளமான போட்டோக்கள் இருந்த ஒரு கவர் வந்தது.

அந்த கவருக்குள் இருந்து எடுத்த முதல் படமே..கூலிங்கிளாஸ் போட்ட பகவன்  நித்யாநந்தாவோட படம்தான்..!


Bhagavan Nityananda

யார் இந்த ஞானி..?

-“..400 வருஷங்களுக்கு முந்தைய என்னுடைய முற்பிறவியில நான்தான் இந்தக்கோயிலை என்னுடைய நேரடி மேற்பார்வையில கட்டினேன்..”

-பகவான் நித்யாநந்தாவின் மஹாசமாதியின் அரிய வீடியோப்பதிவுகள்..!

-என பல ஆச்சரியங்கள் தொடரும்..நாளை வரை காத்திருங்கள்..!


0 comments: