Sunday, July 28

போதிதருமரும் நானும் ஒன்றாகச் சுற்றித் திரிந்தோம் - ஒரு ஞானி வெளியிட்ட முற்பிறவி ரகசியம்

வாங்க..இப்போ  நான் சொல்லப்போறது எல்லாமே நேரடியா என்னோட அனுபவங்கள்...நான் நேரடியா உணர்ந்ததுக்கு சாட்சிகள் தேவையில்ல...ஆனா, இப்போ நான் சொல்லப்போற எல்லாமே சத்தியமானவை.

இத நான் உணர்ந்த தருணம் ரொம்பவே அற்புதமானது..,

அந்த சமயத்துல வார்த்தைகள்ல விவரிக்க முடியாத உன்னதமான தியானநிலையிலயே நான் தொடர்ந்து இருக்கத் தொடங்கினேன்.

அப்போதான் என்னால சில  குறிப்பிட்ட நிலைகளுக்கெல்லாம் போக முடிஞ்சது. 

தியானத்துல படிப்படியா வெவ்வேற இடங்களுக்கு நான் டிராவல் செஞ்சப்பதான் என்னோட முற்பிறவி ரகசியங்கள் எல்லாம்  எனக்கு கொஞ்ச கொஞ்சமா காட்சிகளா தெரிய ஆரம்பிச்சது.

அத பார்க்க பார்க்க எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருந்தது.

இப்ப எனக்கு கிடைச்சிருக்குற  இந்த ஞானத்திற்கு அடிப்படையே நான் பலபிறவிகளா சேகரிச்ச அறிவுதான்

அது ஒவ்வொரு பிறவியிலயும் மேலும், மேலும் செரிவடைஞ்சு இப்போ ஞானமா மலர்ந்திருக்கு.

14 நூற்றாண்டுகளுக்கு முன்..

அதாவது 4 ம் நூற்றாண்டுல..அதாவது கி பி440ல இருந்துகி.பி 528க்குள்ளே தான் 

எனக்கும் அவருக்கும் சந்திப்பு ஏற்பட்டுச்சு..அவரு போதிதருமர்!


போதிதருமர்
இந்த 21ம் நூற்றாண்டுல  ஒரு தமிழ் சினிமா மூலாமாத்தான் அவர நீங்கள்லாம் தெரிஞ்சிகிட்டீங்க..ஆனா.. அவரு எவ்ளோ பெரிய ஞானின்னு உங்களுக்கெல்லாம் தெரியுமா ? 

கி.மு.563 ல இருந்து கி. மு 483. இதுதான் புத்தர் வாழ்ந்ததா சொல்லப்படுற காலகட்டம்.

கௌதம சித்தார்த்தன் ஞானத்ததேடி எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு ஒரு கட்டத்துல புத்தகயாவுல போதிமரத்தடியில  ஞானமடைஞ்சாரு.

அதுக்கு அப்புறமா அவரோட போதனைகள அடிப்படையா வச்சு உருவான புத்தமதம் உலகம் முழுக்க பரவத்தொடங்குச்சு.

ஆனாலும், அந்த சமயத்துல பெண்கள் ஞானத்தைத்தேடி தவ வாழ்க்கையில ஈடுபடுறதுல  புத்தருக்கேகூட ஒருவித தயக்கம் இருந்ததா சொல்லப்படுவதுண்டு.

ஆனா, புத்தருக்குப்பிறகு அவரோட போதனைகளால ஒரு பெண் ஞானமடைஞ்சு பலருக்கு வழிகாட்டி ஒரு குருவா உயர்ந்தாங்க..

அந்த பெண்தான் ..பிரஜ்நதாரா (Prajnatara)

புத்தரோட வழி வந்த ஞானி புண்யமித்ரா(Punyamitra) அப்டிங்கறவருதான் இவங்களோட குரு.

ஊர் ஊரா சன்னியாசியா சுற்றித் திரிஞ்சிட்டு இருந்த பிரஜ்நதாரா ஒருகட்டத்துல காஞ்சிக்கு வந்தாங்க.

காஞ்சிபுரத்துல அப்போ பல்லவ மன்னர் சிம்ஹவர்மன் அரசாட்சி செஞ்சிட்டு இருந்தாரு. அவரோட மூன்றாவது மகன்தான் போதிதாரா(Bodhitara).

இவருக்கு பிரஜ்நதாரா தியான பயிற்சிகள் எல்லாம் சொல்லிகொடுத்து
வழி காட்ட , 7வயசு சிறுவனா இருக்கும்போதே ஞானமடைஞ்சிருக்காரு போதிதாரா.
அதன்பிறகுதான் அவரோட பேரு போதிதருமர்னு மாற்றப்பட்டிருக்கு.


சின்னவயசுலயே போதிதருமரு தற்காப்புக்கலைகள புதுசுபுதுசா உருவாக்கி அதுல நல்ல பயிற்சியில இருந்திருக்காரு. இப்போதைய காஞ்சி மாநகர்லதான் தன்னோட தற்காப்புக்கலை பயிற்சிகள செஞ்சிருக்காரு.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்
ஒருகட்டத்துல பரபரப்பான காஞ்சியில இருந்து ஆந்திராவுல இருக்குற நாகார்ஜூனகொண்டா என்கிற ஸ்ரீபர்வத மலைப்பகுதிக்குப் போயி வஜ்ரகாய நிலைய அடையறதுக்கான சில விசேஷமான பயிற்சிகள  எடுத்திருக்காரு.அது மூலமா ஒரு விசேஷமான சக்தியும் அவருக்கு கிடைச்சிருக்கு. 

நாகார்ஜூனகொண்டா, ஆந்திர மாநிலம்

வஜ்ரகாய நிலைய அடைஞ்சவங்கள  எந்தவிதமான நோயோ ,விஷமோ பாதிக்காது. அப்படி ஒரு நிலைய அடைஞ்சவருதான் போதிதருமர்.
(Research by Babu T. Raghu, The Founder of Sailum Zen Monastery in Bangalore).

தன்னோட 150வது வயசுல தனது குருவான பிரஜ்நதாரா கொடுத்த ஒரு வித்யாசமான பொறுப்ப நிறைவேத்தறதுக்காக போதிதருமர் சீனாவுக்கு புறப்பட்டுப்போனாரு.

புத்தருக்கு பின்னாடி 600 வருடங்கள் கடந்து ஓடிப்போச்சு. ஏராளமான புத்த சன்னியாசிகள் சீனாவுக்கு போயும் அதுவரைக்கும் அங்க ஆயிரக்கணக்கான மடாலயங்களும், சன்னியாசிகளும் மட்டும்தான் உருவானாங்க. 

ஒருத்தர்கூட ஞானமடையல. அப்போதான் பிரஜநதாரா " போதிதருமா உடனே,நீ சீனாவுக்கு போ. உன்னாலதான் அங்க இருக்கிறவங்களுக்கு ஞானத்தை உணர வைக்க முடியும்" னு சொல்லி அவர அனுப்பிவைச்சாங்க.

அந்த வகையில சீனாவுக்குப்போன முதல் ஆன்மஞானி போதிதருமர்தான் !

அங்க ஒரு குகையில போதிதருமர் தொடர்ந்து 9 வருடங்கள் தவம் செஞ்சதப்பத்தியும், அந்த குகையோட வீடியோகாட்சிகளையும் ஏற்கனவே நம்மோட முந்தைய பதிவுல படிச்சிருப்பீங்க. 

குங்பூ கலையை உருவாக்கியவர், ஜென் புத்தமதத்தை தோற்றுவித்தவர்ன்னு அவருக்கு நிறைய பெருமைகள் கிடைச்சது.

தற்காப்புக்கலைகள் மூலமா உடலையும் மனதையும் ஆன்மாவையும் உணரவைத்து ஞானமடைச் செய்யும் ஒரு புது வித்தையை சீனாவிற்கு போதிதருமர் அறிமுகம் செஞ்சு வச்சாரு.

அது இன்னைக்கு ஜப்பான்லயும் பரவி போதிதருமரோட புகழ சொல்லிட்டு இருக்கு.

பேக் டு பிளாஷ்பேக்..

என்னோட முற்பிறவிகள்ல ஒருபிறவியில எனக்கும் போதிதருமருக்கும் நல்ல அறிமுகம் இருந்தது.

நானும் அவரும் ஏறக்குறைய ஒரு மூணு மாசம் ஒன்னா நிறைய  இடங்களுக்கு சுத்தியிருக்கோம்.

என்னைமாதிரியே அவருக்கும் என் மேல பிரியம் அதிகம். அதனால நல்லா பழகினாரு.

அதுக்கு ஒரு முக்கியமான  ஒரு காரணம் இருந்துச்சு. மத்தவங்களமாதிரி  நான் அவருகிட்ட  எதுபத்தியும் கேள்வி கேட்கறதேயில்ல.

அதுபத்தி அவரே என்கிட்ட ஒருமுறை  சொல்லியிருக்காரு.

"நா பாத்ததுலயே நீ ஒருத்தன் மட்டும்தான்  இதுவரைக்கும் எங்கிட்ட எந்தக் கேள்வியும் கேட்காதவன். எங்க போனாலும் கேள்வி, யாரப்பாத்தாலும் சந்தேகம்ன்னு எதையாவது கேட்கிறதால எனக்கு கேள்விகள்னாலே எரிச்சலடைய செய்யுது
நீ ஒருத்தன்தான் அப்படி என்ன கேள்விகளால எரிச்சல்படுத்தாதவன்" அப்படின்னாரு.

உடனே, நான், "அதுக்கு ஒரு காரணம் இருக்கு"

போதிதருமர்,"என்ன அது?"(இவருமட்டும் கேள்வி கேக்கலாமா..?)

நான்,"எங்கிட்ட பதில்கள் மட்டும்தான் இருக்கு, அதனாலதான் நான் யாரையும் கேள்வி கேட்கறதேயில்ல. உங்ககிட்ட எதாவது கேள்வி இருந்தா கேளுங்க. இல்லைன்னா அமைதியா இருங்க"

இப்படி சொல்லி முடிச்சதுதான் தாமதம், உடனே, அவரும் சிரிக்க நானும் சிரிக்க அந்த இடமே ரம்மியமானதா மாறிடுச்சு.

ரெண்டுபேரும் ஒரே நிலையில இருக்கறதாலதான் இப்படி ஒரு அனுபவம்.

அதுக்குப்பிறகுதான் அவரு தன்னோட பயணத்துல என்னையும் தொடர்ந்து அவரோட இணைஞ்சு வரும்படி கூப்பிட்டாரு.

"நீங்க கூப்பிட்டு அத நான்  முடியாதுன்னு சொல்றதுக்காக என்னை நீங்க பொறுத்துதான் ஆகனும்.

எனக்குன்னு ஒரு தனி வழி இருக்கு. அதனால, இனியும் நான் உங்களோட வரமுடியாது. இந்த இடத்துல இருந்து நாம ரெண்டுபேரும் பிரிஞ்சுடலாம்"னு சொன்னேன்.

அவரால நம்பவே முடியல. இதுவரைக்கும் அவரு யாரையும் தன்னோட வரச்சொல்லி கூப்பிட்டதே இல்ல.

அவ்வளவு ஏன், அந்த காலகட்டத்துல சீனப்பேரரசனான வூ
முதன்முதலா சீனாவுக்கு வந்த போதிதருமர பார்க்க வந்தாரு.

புத்தமதத்த சீனாவுல பரப்பறதுக்காக அதுக்கு முன்ன அங்க வந்த  புத்த சாமியார்களுக்கெல்லாம்  பேரரசரான வூ சிறப்பான வசதிகள செய்துகொடுத்து கவனிச்சிருக்காரு

அதே மாதிரி போதிதருமரையும் தன்னோட அரண்மனைக்கு வரும்படி கூப்பிட்டாரு. ஆனா, இவரோ அந்த இடமெல்லாம் நமக்கு செட்டாகாது

எனக்கு இந்த மலையும், காடும்தான் சவுகரியமா இருக்கும்ன்னு மறுத்துட்டாரு. அப்படி பேரரசர் கூப்பிட்டே மறுத்தவருக்கு அவர் கூப்பிட்டு நான் வரலன்னு சொல்லி மறுத்தது ஆச்சரியமா இருந்தது.

அவரலயே நான் சொன்னத நம்ப முடியல.

அப்போதான் நான் சொன்னேன், "உங்கள மறுத்து யாரும் இதுவரைக்கும் பேசினதேயில்ல. அதனால,நீங்க மறுக்கறதோட  ருசிய  இதுவரைக்கும் அனுபவிச்சதேயில்ல. அதுக்காகத்தான் நான் இப்ப உங்களோட அழைப்ப மறுத்தேன். நான் புறப்படுறேன்"

அப்படின்னு  சொல்லிட்டு அவர்கிட்ட இருந்து விடைபெற்று என்னோட வழியில நான் பயணத்தை தொடங்கிட்டேன்.

இது எல்லாமே 1400 வருஷங்களுக்கு முன்னால...

ஏன்னா..நான் இந்த பூமிக்கு வந்துபோன காலகட்டம் 19 ம் நூற்றாண்டு

-(19 ஜனவரி 1931 முதல் 11டிசம்பர் 1953வரை)

இப்படிக்கு

என்னோட  உண்மையான அனுபவங்கள உங்களோடு பகிர்ந்துகொள்ளும் 

-ஓஷோ 

ஓஷோ







Wednesday, July 24

42 ஞானியரின் சங்கமம் !


குருபரம்பரையில எழுதறதுக்காக இவங்கள்ல சிலரைப்பத்தி படிச்சிட்டு இருந்தப்போ இப்படி ஒரு குரூப் போட்டோவ குருபூர்ணிமா அன்னைக்கு பார்க்க நேர்ந்தது. ஓரே எடத்துல ஞானமடைஞ்சவங்கள ஒண்ணா பார்க்கறது விவரிக்கமுடியாத ஓர் அனுபவம்.இந்தியா முழுக்க இப்படி ஒருத்தரல்ல..நூறுபேரல்ல...ஆயிரக்கணக்குல ஞானிகள் இருந்துட்டு தான் இருக்காங்க. நம்மோட அறியாமையினால இந்தகாலத்துல அதெல்லாம் சாத்தியமில்லன்னு பொத்தாம்பொதுவா கமெண்ட் அடிச்சிட்டு போயிட்டே இருக்கோம். ஆனா, கொஞ்சம் கவனம் கொடுத்து கவனிக்க ஆரம்பிச்சோம்னா நமக்கு பக்கத்துலயே இவங்க இருப்பாங்க.அத நிச்சயமா உணரமுடியும்.
நம்மை நாம் உணர உதவறதுக்காக இவங்களப்போல பல ஞானிகள் வெவ்வேறு ரூபத்துல ஒவ்வொரு மனிதனை பின்தொடர்ந்துகிட்டே தான் இருக்காங்க.ஆனா, நாமதான் அவங்கள கவனிக்க தவறிடறோம்.இனியாவது குருவை நோக்கி நம்மோட பார்வையை திருப்புவோம்..!

Monday, July 22

இன்றைக்கு பௌர்ணமி.! Webcam மூலமா திருவண்ணாமலைய நேரடியா பார்க்க ஒரு வசதி

திருவண்ணாமலை பின்னணியில் பகவான் யோகிராம் சுரத்குமார்

இன்னைக்கு ஆனி பௌர்ணமி,எல்லாராலயும் கிரிவலத்துக்காக திருவண்ணாமலைக்கு  போகமுடியாது. ஆனா, இருந்த இடத்துல இருந்தே திருவண்ணாமலைய நேரடியா தரிசனம் செய்ய முடியும். 
 webcam மூலமா live -ஆ 60நொடிகளுக்கு ஒருமுறை திருவண்ணாமலைய பதிவு செஞ்சு இந்த வலைதளத்துல ஆட்டோமேடிக்கா பதிவேற்றம் செய்ய மாதிரி  செட் பண்ணியிருக்காங்க.தினமும் காலைல 6 மணியில இருந்து இந்த கேமரா மலைய படம்புடிக்கத் தொடங்கிடுது. சாயந்திரம் எத்தனை மணி வரை இந்த கேமரா இயங்கும்னு தெரியல. இதோ இன்னைக்கு 18.34 ன்னு நேரத்த காட்டியபடியே கேமரா நின்னு போயிருக்கு. அது அனேகமா மாலை 7 மணியா இருக்கலாம்னு நினைக்கிறேன்.ஏன்னா,  சிலநேரங்கள்ல இந்த கேமரா ஸ்டக் ஆகி நின்னுடுதுன்னு இத நடத்தறவங்களே சொல்லியிருக்காங்க. ஆனாலும் இது ஒரு அற்புதமான முயற்சி.  திருவண்ணாமலை வாசியும் அண்ணாமலையாரின் பக்தருமான திருமதி சாவித்ரிங்கறவங்க தான் நடத்தறாங்க.
ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!
அண்ணாமலையை தரிசிப்போம்..வாருங்கள்.  

Saturday, July 20

காந்தியின் ராமனும், ராமாயண ராமனும்..!

சில நாட்களா கம்பராமாயணத்து மேல ஒரு ஈர்ப்பு.  கிடைக்கற நேரங்கள்ல இணையத்துல படிக்கத் தொடங்கினேன்.கொஞ்சம் படிச்சதுலயே அதுல இருக்குற சிலிர்ப்பூட்டும் உணர்வுகள் என்னை  ஆக்ரமிக்கத் தொடங்குச்சு.

குறிப்பா, அனுமன் முதன் முதலா ராமனை பார்த்த இடம்.

ராமா,ராமா
சுக்ரீவனைத் தேடி ராமனும், லட்சுமணனும் காட்டுக்குள்ள வந்துட்டு இருக்காங்க.

வில்லோட வர்ற இவங்க இரண்டுபேரையும் தூரத்துல இருந்தே பார்த்துட்டு தன்னோட அண்ணன் வாலிதான் தன்னை கொல்ல இவங்கள அனுப்பியிருக்கிறதா  நினைச்சு பயந்துபோன சுக்ரீவன் தலை தெறிக்க ஓடி ஒரு குகையில ஒளிஞ்சுக்கிட்டான்.

உடனே  தன்னோட அமைச்சரான அனுமனைப்பார்த்து
அவங்க யார்னு போய் தெரிஞ்சிட்டு வான்னு சொல்லி அனுப்புறான்.

அவங்க ரெண்டுபேரையும் தூரத்துல இருந்தே பார்த்து யோசிக்கிறான் அனுமன்.

ஆனா, அவங்களோ அங்க எங்கயாவது சீதை இருக்காளான்னு சுற்றும் முற்றும் பாத்துக்கிட்டே வர்றாங்க.

ராமனை சந்திக்க அவங்களுக்கு பக்கத்துல போறான் அனுமன்.

ராமனை நேருக்குநேரா பார்த்த நொடியில அனுமனோட மனசுக்குள்ள விவரிக்கமுடியாத உணர்ச்சிப்பெருக்கெடுக்குது.

ஒரு மனுஷன பார்த்த உடனே இப்படி மனசுக்குள்ள அன்பு சுரக்குமான்னு வியந்துபோறான் அனுமன்.

நாமகூட சிலரை பாக்கும்போதே அவங்களோட நட்பு வச்சிக்கணும்னு துடிப்போம்.

அதேமாதிரி சிலரை பாக்கும்போதே எரிச்சலடைவோம்.

அந்தமாதிரிதான் அனுமனுக்கும் ராமனை பார்த்ததுமே ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.

இந்த இடத்திலதான் எனக்கும் அப்படி ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.நான் அறியாமலேயே ராமாயணம் என்னை ஆட்கொண்ட இடமிது.

அடுத்ததா, ராம, ராம எனும் ராமநாமத்தை வானரங்கள் சொல்லச் சொல்ல சம்பாதிக்கு இறக்கை முளைக்கும் இடத்தில் நம் உடம்பிலும் ஒரு சன்னதம் ஏற்படுவதை மறுக்க முடியாது.

எத்தனையோ தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தில் இருந்தும் இன்னும்கூட பலப்பல நுட்பமான தருணங்களை கண்டு பிடிச்சிகிட்டேதான் இருக்காங்க.

அந்தக்காவியமும் ரசிகமனதிற்கு ஏற்ப காலம்காலமாக விரிஞ்சுகிட்டேதான் இருக்கு.

இப்படி ஒரு எல்லையில்லா காவியத்தோட நாயகன் எவ்வளவு அற்புதமானவன்.

அவனது ராமநாமம் எத்தகைய சிறப்புகளையும் நிகழ்த்த வல்லது

அதனாலதான் காந்தி எந்தநேரமும் ராமநாமத்தை சொல்லிட்டு இருந்திருக்கிறார்னு நெனச்சுகிட்டே இணையத்துல தேடிப் பார்த்தப்போதான் எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

'ஹே ராம்'

ராமரைப்பற்றி காந்தியின் ஸ்டேட்மெண்ட் இதுதான்,

 "என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல. தசரதன் மைந்தனல்ல. ராமாயணக்கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்"

இப்படி காந்தி சொல்லியிருப்பார்னு நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவேயில்ல. எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாயிருந்தது.

அப்படின்னா, காந்தி வணங்கின,அவரோட உயிருக்கு உயிரா மதிச்ச ராமன் யாரு?

இப்படி ஒரு சந்தேகம் எனக்கு வந்தது. இந்த  சந்தேகத்த யாரால தீர்க்கமுடியும்ன்னு யோசிச்ச உடனே எனக்கு எழுத்தாளர் ஜெயமோகன்தான் நினைவுக்கு வந்தாரு.

அவருக்கு எழுதினேன். உடனே, பதில் சொல்லியிருக்காரு.

(அந்தப்பதிவு காந்திராமன்)

அவரோட பதில் எனக்கு ஒரு புதிய திறப்பா அமைஞ்சிருக்கு.

இதுல இன்னும் நான் நிறையதூரம் பயணப்பட வேண்டியிருக்கு. 

இணையத்துல ராமாயண ராமனும், காந்தியின் ராமனும் என்பது குறித்து ஒரு பெரும் விவாதம் தேவையாயிருக்கு.

விபரம் அறிந்தவர்கள் இதை முன்னெடுத்து செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு.

ராம காதை குறித்து எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி அவர்களும் விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். (அந்தப்பதிவு Kamban’s golden touch)

தொல்பழங்குடி மக்களோட வாழ்வுல பலப்பல ஆண்டுகளாக வாய்வழிச்செய்தியா ராமரைப்பத்தின  பலவிதமான நிகழ்வுகள் பேசப்பட்டு வந்திருக்கு,

அந்தசம்பவங்களும், ராமனின் வாழ்க்கையும்  கி.மு 5ம் நூற்றாண்டுல் புத்த ஜாதகா கதைகள்(Buddha Jataka tales) என முதன்முதலா எழுத்துல உருவானது.

Jataka tales of Buddha 
அதில் புத்தர் ஞானம் அடைவதற்கு முந்தைய கவுதமனே  ராமனாக உருவகப்படுத்தப்படுகிறார்.

தனது வளர்ப்புத்தாயின் கோபத்தால தனது நாட்டை விட்டுட்டு இமயத்திற்கு ராமன் செல்வதாக இங்கு சொல்லப்படுகிறது.

நாட்டின் பலபகுதிகளிலும் பேசப்பட்ட ராமரைப்பற்றின பல சம்பவங்களை தொகுத்த வால்மீகி இதனை ராமாயணமாக உருவாக்கினார்.

வடக்கில் நேபாளத்தில் தொடங்கி தெற்கில் ஸ்ரீலங்காவரை ராமாயண களம் அமைஞ்சிருந்தது.

இந்தியாவின் கலாச்சார முகத்தை ராமாயணத்துல நிர்தட்சணமாக தரிசிக்க முடியும். அதனாலேயே வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் ராமாயணத்தை தங்கள் வாழ்க்கையோட  பொருத்திப்பார்த்து ரசிச்சாங்க.

ராமாயணத்தின் ஆன்மாவுல ஒளிர்ந்த உண்மைதான் அத காலம் கடந்தும் ஒரு மிகப்பெரும் காவியமா வளர்த்தெடுத்திருக்கு.

ஆன்மா இல்லாத எந்த எழுத்தும் காலம் கடந்து நிற்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.  

Friday, July 12

இதோ..நேரில் வந்த மகான்..!


கவிஞர் பெருமாள் ராசு அய்யா அவர்கள் 
 பகவான் யோகிராம்சுரத்குமாருடனான தனது அனுபவங்களை பல இடங்களில் தொடர்ந்து பதிவு  செய்து வருகிறார். அவருடன் இருக்கும் சமயங்களில் பலவிதமான சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை நாங்களும் உணர்ந்திருக்கிறோம். அப்படி அய்யா அவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்ட ஒரு நிகழ்வை அவருடைய வரிகளின் மூலமாகவே இங்கு பகிர்ந்துகொள்வது பலருக்கும் பலனளிக்கும் என்பதால் அய்யாவின் பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்ட இதோ ஒரு இதிகாசம் எனும் நூலில் இருந்து ஒரு சம்பவம் இங்கே உங்கள் பார்வைக்கு..!

                                                 ஓவியத்தில் சிரித்தார்..!

கவிஞர் சொல்கிறார்," ஒருநாள்  இரவு எம்பெருமானின் நினைவு மனதில் நிழலாடிக்கொண்டே இருந்தது. அவரது படத்தை வரைய ஆரம்பித்தேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் கை தானாக, நின்றுவிட்டது. எவ்வளவு முயன்றும் முடியவில்லை.

இரவு12.00 மணி இருக்கும். யாரோ கதவைத் தட்டிய சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். கோவிந்தசாமி என்ற அன்பர் நின்றிருந்தார். "என்னாங்க இந்த நேரத்தில்?" என்றேன். சுவாமிஜி அனுப்பியதாக சொன்னதும் மனம் தூக்கி வாரிப்போட்டது.

சுவாமிஜி ஒரு ஆப்பிள் பழத்தை எனக்குக் கொடுக்கச் சொல்லி அனுப்பியிருந்தார். இந்த நேரத்தில் என்ன அவசரம், காலையில் கொண்டு வந்திருக்கலாமே என்றேன். அதற்கு அவர், சுவாமிஜி நேராக இங்கு வந்து பழத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகச்சொன்னார் என்றார்!

பெருமானின் அருளாக அவர் அனுப்பிய பழம் வந்து சேர்ந்தது. படம் வரைய ஆரம்பித்தேன். மளமளவென வளர்ந்து நிறைவுபெற்றது.

பிறகு ஒருநாள் திருவண்ணாமலை சென்றபோது அப்படத்தையும் கொண்டு சென்றேன். அனைவரும் பாராட்டினார்கள். அப்போழுது பெரியவர், டாக்டர் சங்கர்ராஜூலு, முதல் பலரும் இருந்தனர்.

சுவாமிஜியும் அதனை ரசித்தார்கள். நான் சுவாமிஜியிடம் உங்கள் சிரிப்பின் அழகை அதில் கொண்டு வரமுடியவில்லை என்றேன். 

உடனே சுவாமிஜி "why should Perumal say so.." எனக்கூறி படத்தை வாங்கிக்கொண்டு மேஜை மீது அதை வைத்து அதன்மீது தனது கையை கொஞ்ச நேரம் வைத்து விட்டு பிறகு என்னிடம் கொடுத்து "see Perumal whether there is any change in it?" என்றார்.

அதற்கு நான் "There may be changes, but I don't see Swamiji" என்றேன்.

பெருமான் அழகாக சிரித்துவிட்டு அப்படத்தை வாங்கி தன் கையை அதன்மீது வைத்து சிறிது நேரத்தில் தந்தார். 

அதில் ஒரு தெய்வீகப் புன்னகை மலர்ந்திருந்தது. 

அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

அந்தப் படத்தை பெருமான் மீண்டும் தந்தபோது அம்மா(மஹாலட்சுமி ) அந்தப் படத்தை தொழுகைக்காக வைக்க வேண்டும் எனக் கூறினார். 

பெருமான் உடனே அந்தப் படத்தை வாங்கிக்கொண்டு என்னை பேனா கொடுக்குமாறு கேட்டார்.

நானும் கொடுத்தேன். படத்தின் நான்கு மூலைகளிலும் வட்டவட்டமாக கிறுக்கிவிட்டுக்கொடுத்தார்.

அந்தப் பேனாவில் இங்க் இல்லாமல் இருந்தது பிறகுதான் நினைவு வந்தது. வெற்றுப்பேனா கூட மை இல்லாமலேயே அவர் கையில் கிறுக்கும்.

ஒருமுறை அன்பர் ராஜமாணிக்க நாடார் அந்தப் படத்தைப் பார்த்து " நீங்கள் அதனை மையினால் வரையவில்லை. இதயத்தால்  வரைந்திருக்கிறீர்கள்" என்றார். 

ஒருமுறை எம்பெருமான்  எதற்காகவோ 
"Wherever Perumal is there, this Begger is there" என்றார்.
 நானும் சுவாமிஜி ஏதோ எதேச்சையாக சொன்னதாக நினைத்தேன்.

நான் வரைந்த அந்தப்படம் எனது படுக்கைக்குக் பக்கத்திலேயே இருக்கிறது. சிலசமயம் அந்தப்படத்தைப் பார்த்து ஏதாவது அவருடன் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருப்பேன்.

ஒருநாள் இரவு சன்னதித்தெரு வீட்டில் அவருடன் நானும் படுத்திருந்தேன். பெருமான் மேலே பார்த்தவண்ணம் நான் அவரது படத்துடன் பேசியதை அப்படியே சொல்லியபின் "This Begger is there Perumal" என்று சொன்னார்.

அப்பெருமான் முன்பு சொன்ன வாக்கியத்தின் சத்தியம் புரிந்தது. 

அவர்முன் காலமும் தூரமும் காணாமல் போயின. 

கவிஞர் பெருமாள் ராசு -(நன்றி ; இதோ ஒரு இதிகாசம்)

பகவான் யோகி ராம்சுரத்குமாருடன் கவிஞர் பெருமாள்ராசுவும், அம்மா மஹாலட்சுமி அவர்களும் கொண்டிருந்த அன்பினை இந்த சம்பவத்தின் மூலம் நாம் உணரமுடியும். 

பகவானின் பக்தர்கள் இன்றும் யோகிராம் சுரத்குமாரை 
கவிஞர் அய்யா மற்றும் அம்மா மூலமாக உணர்வு பூர்வமாக அனுபவித்து மகிழ்கிறோம் என்பது சத்தியமான உண்மை.

கவிஞர் அய்யாவும், அம்மாவும் இருக்கும் இடத்தில் 
நிச்சயம் பகவான் யோகிராம் சுரத்குமார் இருக்கிறார்.
"Wherever Perumal is there, this Begger is there"
இது பகவான் யோகிராம் சுரத்குமாரின்  சத்தியவாக்கு.

அப்படிப்பட்ட பகவானுக்கு சேலத்தில் கோயில் எழுப்பி கும்பாபிஷேக விழா நடத்தி மகிழ்ந்துள்ளனர் சில அன்பர்கள். இந்த விழாவில் கவிஞர் பெருமாள் ராசு அய்யா அவர்களும், அம்மா மஹாலட்சுமி அவர்களும் கலந்துகொண்டது, பகவான் யோகிராம் சுரத்குமார் அவர்களே  நேரடியாக இந்த விழாவில் கலந்துகொண்டு தனது பக்தர்களுக்கு அருளாசி வழங்கியிருக்கிறார் என்பதாகத்தான் நான் உணர்கிறேன். விழாவில் கலந்துகொண்டவர்களும் இதை உணர்ந்திருப்பார்கள்.

அந்த அற்புதவிழாவின் படங்கள் இதோ..!
சேலம், பகவான் யோகிராம் சுரத்குமார் நாமகேந்திரா
 கும்பாபிஷேகவிழா படங்கள்


அழைப்பிதழ் - முதல் பக்கம்

அழைப்பிதழ் - இரண்டாம் பக்கம்

அழைப்பிதழ் - மூன்றாம் பக்கம்

அலங்கரிக்கப்பட்டிருக்கும் உள்மண்டபம்

அலங்கரிக்கப்பட்டிருக்கும் உள்மண்டபம்
அருளாசி பொழியும் பகவான் யோகிராம்சுரத்குமார்


கும்பாபிஷேக விழா காட்சிகள்


யாகசாலை

யாகசாலையில் வேள்வி

'அம்மா மஹாலட்சுமியும், அய்யா கவிஞர் பெருமாள்ராசுவும் (முன்வரிசையில்) '

பகவான் யோகிராம்சுரத்குமார்
என்றென்றும் நம்மை ஆசீர்வதிக்கும் ..பகவான், 
இதோ இப்போது இவர்கள் மூலமாக நமக்கு அருள்கிறார்.!

'அம்மா,அய்யாவுடன் விழாக்குழுவினர்'


கவிஞர் பெருமாள் ராசு அய்யாவும், அம்மா மஹாலட்சுமியும் 
அந்த பகவானின் உருவில் நம்மை ஆசீர்வதிக்கின்றனர்
குருவே சரணம்..!
யோகிராம் சுரத்குமாரா
யோகிராம் சுரத்குமாரா
யோகிராம் சுரத்குமாரா
ஜெயகுருராயா..!